சினிமா

தளபதி விஜயின் திரைப்பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம் எது தெரியுமா?

Summary:

Vijay in poove unnakaga movie mega hit movie

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகயிருந்தது ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக திரைக்கு வர தாமதம் ஆகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தின் வருகைக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜயின் திரைப்பயணத்தில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது தளபதியின் பூவே உனக்காக. 


Advertisement