விஜய்யின் GOAT திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய்யின் GOAT திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!



Vijay in GOAT movie release on September 5

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

vijay

மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதற்கட்ட படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் நடிகர் விஜய் துபாயில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களின் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது. 

vijay

இந்த நிலையில் விஜய் நடித்து வரும் GOAT திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.