மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
ஒரே ஒரு போன் கால்..! 11 பெண்களை ஒரே ஒரு போன்காலில் காப்பாற்றிய தளபதி விஜய்.! குவியும் வாழ்த்துக்கள்.!
ஊரடங்கு காரணமாக தூத்துக்குடியில் சிக்கியிருந்த பெண்களை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் மீட்டு அவர்களின் குடும்பத்துடன் சேர்த்த தளபதி விஜய்யின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தூத்துக்குடியில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சென்னையை சேர்ந்த 11 பெண்கள் ஊரடங்கு உத்தரவிற்கு முன் தூத்துக்குடி சென்றுள்ளன்னர். அந்த 11 பெண்களில் தேவிகா என்பவரைத்தவிர அனைத்து பெண்களும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் தூத்துகுடியிலையே மாட்டிக்கொண்டார்.
தங்களிடம் இருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்ட நிலையில், பேருந்து நிலையங்களிலும் கோவில்களிலும் தங்கியிருந்த அவர்கள் ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடியுள்ளனர். இந்த தகவல் தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் மூலம் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிஸி ஆனந்த் அவர்களுக்கு சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த தகவல் விஜய்யின் காதுக்கு வர, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு போன் செய்த விஜய், உடனே அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து முறையாக அரசிடம் அனுமதி பெறப்பட்டு, 11 பெண்களும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏறக்குறைய 40 நாட்கள் கஷ்டப்பட்ட பெண்களை விஜய் ஒரே போன் காலில் காப்பாற்றியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.