சினிமா

தளபதி விஜய்க்கு இந்த நடிகர்களை தான் அதிகம் பிடிக்குமாம்! யார் அவர்கள் தெரியுமா?

Summary:

Vijay goundamani senthil

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு என்று அதிக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் அவரின் நடனத்தை யாராலும் அடித்து கொள்ள முடியாது. இதுவரை அவர் 60 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலு‌ம் இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பிகில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மேலும் இப்படம் பெண்களை மையப்படுத்தி உருவான படம் ஆதலால் பெண்கள் மத்தியில் விஜய்க்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தற்போது மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தற்போது நடிகர் விஜய்க்கு காமெடி நடிகர்களான கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்களை ரெம்ப பிடிக்குமாம். இவரின் காமெடியுள்ள சிடியை எப்போதும் தனது காரில் வைத்திருப்பாராம். மேலும் விஜய் சோர்வாக இருக்கும் போது அவர்களின் காரில் போட்டு கேட்பாராம்.


Advertisement