தான் அணிந்திருந்த பிகில் ஜெர்சியை விஜய் யாருக்கு பரிசாக கொடுத்துள்ளார் தெரியுமா!! செம உற்சாகத்தில் பிரபலம்!!

தான் அணிந்திருந்த பிகில் ஜெர்சியை விஜய் யாருக்கு பரிசாக கொடுத்துள்ளார் தெரியுமா!! செம உற்சாகத்தில் பிரபலம்!!


vijay-gift-jersy-to-actor-sowndararaja

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து உருவாகிய படம் பிகில். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றது.

vijayமேலும் இந்த படத்தில் கால்பந்து வீரராக நடித்திருந்த விஜய் 5 எண் போட்ட சிவப்பு நிற ஜெர்ஸி ஒன்றை அணிந்திருந்தார். அந்த ஜெர்சியை விஜய் நடிகர் சவுந்தராஜாவிற்கு பரிசாக அளித்துள்ளார். 

இதுகுறித்து ஜெர்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இது அன்புக்குரிய நடிகர் விஜய் அணிந்திருந்த ஜெர்சி. இதனை அவரே எனக்கு பரிசாக அளித்தார். நான் இதனுடன் மிகவும் உணர்ச்சிகரமாக பிணைக்கப்பட்டுள்ளேன். இது  இந்த ஆண்டு எனது சிறந்த பரிசாக இருக்கும். என பதிவிட்டுள்ளார்.