சினிமா

நடிகர் கருணாகரனை மோசமாக திட்டிய விஜய் ரசிகர்! ட்விட்டரில் திடீர் பரபரப்பு

Summary:

Vijay fan abused badly actor karunakaran

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கருணாகரனை விஜய் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறிய குட்டிக் கதையை விமர்சித்த நடிகர் கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. விஜய் பற்றி கருணாகரன் பேசிய ஒரு சில வார்த்தைகளுக்காக விஜய் ரசிகர்கள் கருணாகரனை மிகவும் மோசமாக விமர்சித்தனர். குறிப்பாக கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கும் அளவிற்கு சென்றனர் விஜய் ரசிகர்கள்.

சில நாட்களாக அமைதியாக இருந்த இந்த பிரச்சினை மீண்டும் வெடிக்க துவங்கியுள்ளது. இப்போ கருணாகரன் அப்படி என்ன செய்துவிட்டார் என்று யோசிக்கிறீர்களா! பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. பேட்ட படத்தினை புகழ்ந்து ஒரே ஒரு ட்வீட் தான் பதிவிட்டார். 

அதில், "இதுவரை ரசிகர்களால் உருவக்கப்பட்ட போஸ்டர் டீசரை தான் நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். முதல் முறையாக ரசிகரால் உருவாக்கப்பட்ட படம் பேட்ட தான். படத்தின் பாடல்கள், இசை உட்பட மொத்த படக்குழுவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நான் படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன்" என பதிவிட்டார். 

இவர் பதிவிட்ட சில நிமிடத்திலேயே 'Thalaphathy' என்ற பெயரில் ட்விட்டர் பக்கத்தில் இருக்கும் சுஜித் என்ற விஜய் ரசிகர் கருணாகரனை மோசமான வார்த்தைகளால் திட்டி கமெண்ட் செய்தார். அதில் இருந்த வார்த்தைகளை படிப்பதற்கே நா கூசுகிறது. எனவே அந்த வார்த்தைகள் மட்டும் இங்கு மறைக்கப்பட்டுள்ளது. 

இதனால் மிகவும் கோபமான கருணாகரன் அந்த கமெண்ட்டை ரீட்வீட் செய்து தன் பங்கிற்கு திட்டி தீர்த்துள்ளார். அதில் அவர், "உன்னைப் போன்று மறைமுகமாக இருந்து கோழை போல் செயல்படும் போலி ரசிகர்களால் தான் பல பிரபலங்களின் நன்மதிப்பும் அவர்களின் உண்மையான ரசிகர்களின் மதிப்பும் கெட்டுப் போகிறது. யாருடைய உண்மையான ரசிகனும் இப்படி செய்யமாட்டான். இதையெல்லாம் செய்வதற்கு உனக்கு யாரும் பணம் தருகிறார்களா" என கடிந்துள்ளார்.

இதனால் டுவிட்டரில் திடீர் பரபரப்பு நிலவியது. அதனால் சில நிமிடத்திலேயே அந்த ரசிகர் பதிவு செய்த கமெண்ட் நீக்கப்பட்டது.


Advertisement