எங்க போனாலும் இதையே கேக்குறாங்க.. ரொம்பவே அடி வாங்கியுள்ளேன்.! நடிகர் சிம்பு ஓபன் டாக்!!
சமந்தா சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டார்.. உருக்கமாக பேசிய விஜய் தேவர்கொண்டா.!
தமிழ் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான லைகர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது இவர் குஷி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் செப்டம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் குஷி படத்தின் மியூசிக்கல் கான்செர்ட் நிகழ்ச்சியில் விஜய் தேவை கொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடினர்.

அப்போது பேசிய விஜய் தேவர்கொண்டா, சமந்தா என்ன மையோசிட்டிஸ் நோயிலிருந்து முழுமையாக குணமடையவில்லை. அவர் படப்பிடிப்பில் சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டார். அவர் மேல் லைட்டின் ஒளிபட்டால் எரிச்சல் ஏற்படும், கண் வலி ஏற்படும். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் உங்களுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார்' என அவர் பேசியுள்ளார்.