விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்...! சோகத்தில் ரசிகர்கள்...!



vijay-devarakonda-open-talk-about-ngk

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தான் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் NGK படம் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் இவர் அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் நடிகர்கள் நடிகைகள் பட்டியல் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் தெலுங்கில் மாபெரும் வெற்றி படம் நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்களும் நடிக்க போவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றும், இந்த படத்தில் நடிக்க என்னை அழைத்தால் நன்றாக தான் இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த படக்குழுவில் இருக்கும் அனைவரும் ஆலோசனை கூறும் நிலையில் ரசிகர்களும் ஆலோசனை வழங்கி வருவதாக கூறியுள்ளார்.