13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
தந்தையை பெருமைப்படுத்திய நடிகர் விஜய் மகள்! என்ன செய்துள்ளார் பாருங்கள்!
தமிழ் சினிமாவின் அடையாளம் நடிகர் விஜய். இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட நடிகர்களில் விஜய்யும் ஒருவர். தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். வேட்டைக்காரன் படத்தில் சின்ன பையனாக ஒரு பாடலில் நடனம் ஆடி இருப்பார் சஞ்சய்.
அதேபோல தெறி படத்தில் மகள் திவ்யாவை தெறி படத்தில் அறிமுகம் செய்தார் விஜய்.
க்ளைமாக்ஸ் காட்சியில் தெறி பேபி என்ற டயலாக்கோடு வந்திருப்பார் திவ்யா.
18 வயதான மகன் சஞ்சய் கிரிக்கெட் கோச்சிங் எடுத்து வருகிறார். இவரை கூடிய சீக்கிரம் தமிழக ரஞ்சி அணியில் பாரக்கலாம் என தெரிகிறது.
அதேபோல் மகள் திவ்யா பேட்மின்டன் கோச்சிங் எடுத்து வருகிறார். மேலும் American International School Chennai (AISC) என்ற பள்ளயில் படித்து வருகிறார் திவ்யா சாஷா. இந்நிலையில் அவரது பள்ளியில் அவர் பங்கேற்றுள்ள பேட்மிண்டன் குழு சமீபத்தில் நடந்த ஒரு விளையாட்டு போட்டியில் 3வது இடம் பிடித்துள்ளதாம்.
இந்த தகவலை அவரது பள்ளி நிர்வாகமே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதன் மூலம் தனது தந்தை விஜயை பெருமைபடுத்தியுள்ளார் சாஷா