தளபதியா? தலைவனா? அரசியல் என்ட்ரி குறித்து சூசகமாக பதிலளித்த விஜய்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

தளபதியா? தலைவனா? அரசியல் என்ட்ரி குறித்து சூசகமாக பதிலளித்த விஜய்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!


vijay-answered-the-questin-about-politics

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். அவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. இதனை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்பொழுது அவர் இயக்குனர் நெல்சன் கேட்ட பல கேள்விகளுக்கும் மிகவும் சுவாரசியமாக பதிலளித்துள்ளார். அப்பொழுது அவர் தனது தந்தை குறித்தும், மகன் சினிமாவில் நடிப்பது குறித்தும் மேலும் அரசியல் குறித்த பல கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது இயக்குனர் நெல்சன், இளைய தளபதியில் இருந்து தளபதியான நீங்கள் எப்போது தளபதியில் இருந்து தலைவனாக மாறபோகிறீர்கள் என கேட்டுள்ளார்.

vijay

அதற்கு விஜய், தளபதி விஜய்யாக இருக்கும் நான் தலைவர் விஜய்யாக மாறுவது ரசிகர்களின் கையில்தான் உள்ளது. ரசிகர்களும், காலமும் தான் அதனை முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் அவரை தலைவனாக பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.