மீண்டும் இணையும் சுறா கூட்டணி..! 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜயுடன் ஜோடி சேரும் தமன்னா..!

மீண்டும் இணையும் சுறா கூட்டணி..! 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜயுடன் ஜோடி சேரும் தமன்னா..!


Vijay and Thammna joining again after 10 years in Thalapathi 65

சுறா படத்தில் இணைந்த கூட்டணி தற்போது மீண்டும் விஜய்யின் 65 வது படத்தில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். மாஸ்டர் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டாலும், கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? தயாரிப்பாளர் யார்? படத்தின் நாயகி யார் என பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. 

vijay

ஏற்கனவே விஜய்யுடன் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

vijay

10 ஆண்டுகளுக்கு முன்பு சுறா படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்த தமன்னா அதன் பிறகு விஜய்யுடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் தமன்னா ஜோடி சேர இருப்பது விஜய் மற்றும் தமன்னா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.