தமிழகம் சினிமா

"உங்க வாழ்க்கை ஜம்முனு இருக்கணுமா.." - அப்போ இளைய தளபதி சொல்ற அறிவுரைய கேளுங்க..!!

Summary:

vijay advices his fans

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சர்க்கார். இந்த படத்தினை  வெற்றி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக மீண்டும் யோகிபாபு விஜயுடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சன் பிக்சர்ஸ்  நிறுவனர் கலாநிதி மாறன், நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

sarkar audio launch க்கான பட முடிவு

மேலும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், 

"வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும்  உழைக்கலாம். ஆனால் வெற்றி அடைய கூடாது என்பதற்காகவே ஒரு கூட்டம் உழைக்கிறது. வாழ்க்கை என்ற விளையாட்டை பார்த்த விளையாடுங்க.

உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்தால் வாழ்க்கை ஜம்முனும் இருக்கும். இந்த வரிகளை யார் சொன்னது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதை நான் என் வாழ்வில் கடைபிடித்து வருகிறேன். உண்மைதான் இது என் வாழ்க்கையில் சரியாக பொருந்துகிறது. நீங்களும் அதை பின்தொடருங்கள்" என்று விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.


Advertisement