சினிமா

அட்லீயின் அடுத்தப்பட்டதில் விஜய்யின் கதாபாத்திரம் இதுதானாம்! இதுகூட நல்லா இருக்கே!

Summary:

Vijay acting as football coach in thalapthi 63

சர்க்கார் படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் தளபதி விஜய். தெறி, மெர்சல் என ஏற்கனவே இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் சம்மந்தமான படம் எனவும் கூற பட்டது. இந்நிலையில் தளபதி 63 படத்தில் விஜயின் கதாபாத்திரம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறாராம். மேலும் 16 பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறாராம். இந்தமாதிரி கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பது இதுவே முதல்முறை.

மேலும் இந்தப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படம் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் கனா படம் மூலம் மக்களின் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் விஜயின் படத்தை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement