சினிமா

விஜயின் 64 படத்தில் இணைந்த முக்கிய இளம் நடிகை! அப்ப படம் சூப்பர் தான்!

Summary:

Vijay 64 kowri

நடிகர் விஜய் பிகில் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஒரு பகுதியில் கல்லூரியில் நடப்பது போன்று அமைந்துள்ளது.

எனவே பல இளம் நடிகை, நடிகர்கள் நடிக்க இருப்பதாக உள்ளனர். இந்நிலையில் தற்போது 96 பட இளம் நடிகை கௌரி கிஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். 


Advertisement