தமிழகம் சினிமா

சர்க்காரை அடுத்து பக்கா மாஸ் படத்தில் விஜய்; ரசிகர்களுக்கு செம விருந்து வெளியான பரபரப்பு தகவல்..!!

Summary:

vijay - atle new flim - producers - kadum potti

தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்க்கார் படத்தை தொடர்ந்து கில்லி, துப்பாக்கி போன்ற படங்களின் பாணியில் ஒரு பக்கா மாஸ் கேரெக்ட்டரில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வருகின்ற தீபாவளி அன்று ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்து வெளியாகவுள்ள படம் சர்க்கார்.  இப்படம் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for sarkar

ஏற்கெனவே கத்தி, துப்பாக்கி ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து  உருவாகியுள்ள இப் படத்தை மிகுந்த பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் கூடுதலாக ஏ.ஆர் ரகுமான் மிக பிரமாண்ட முறையில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை தொடர்ந்து கில்லி, துப்பாக்கி போன்ற படங்களின் வரிசையில் ஒரு பக்கா மாஸ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்க இருப்பதாகவும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. அதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Image result for killi movie

ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இது குறித்து பேசும்போது அடுத்து விஜய் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரிக்க தயாராக இருப்பதாகவும் அவ்வாறு அமைந்தால் அது கில்லி, துப்பாக்கி போன்ற போன்ற படங்களைப்போன்று ஒரு பக்கா மாஸ் படமாக அமையும். விஜய் படத்தை தயாரிக்க எங்கள் நிறுவனம் மிகப்பெரிய  கனவுடன்  இருக்கிறது அந்த கனவு நினைவானால் மிகுந்த மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார்.

அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறதா இல்லையா என்பது குறித்து இப்போதைக்கு எந்த நன்பக தன்மையும் இல்லை. விஜய் படத்தை இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் நிறைய போட்டிகள் மட்டும் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. 


Advertisement