"யாருப்பா அது விக்னேஷ் சிவனா?".. சிறுவயதில் எப்படி இருக்காரு பாருங்களேன்..! நயனை புல்லரிக்கவைத்த புகைப்படம்..!!

யாருப்பா அது விக்னேஷ் சிவனா?.. சிறுவயதில் எப்படி இருக்காரு பாருங்களேன்..! நயனை புல்லரிக்கவைத்த புகைப்படம்..!!


vignesh sivan childhood photo

கோலிவுட்டில் "நானும் ரவுடிதான்" என்ற படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் விக்னேஷ் சிவன். இவர், நடிகை நயன்தாராவை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இதன் பின்பு அடுத்ததாக தல அஜித்தை வைத்து படம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

Vignesh Shivan

இவரும், நயன்தாராவும் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் பிரம்மாண்டமாக இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு பல திரைபிரபலங்களும் வந்த நிலையில், நண்பர்கள் உட்பட யாரும் கேமரா மற்றும் செல்போன் மூலம் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. 

ஏனெனில் இவர்களது திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் 25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன், நயன்தாராவை திருமணம் செய்த பின் அதிர்ஷ்டம் எட்டிப்பார்த்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ள நிலையில், பல வாய்ப்புகள் இவருக்கு கிடைத்துள்ளது. 

Vignesh Shivan

இந்த நிலையில் இவர் சிவி படத்தில் நடித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சிறு பையன் போல காட்சியளிக்கும விக்னேஷ் சிவனை கண்ட ரசிகர்கள், யாருப்பா அது விக்னேஷ் சிவனா? என்று கேட்டு வருகின்றனர். 

Vignesh Shivan