சினிமா

6 வருஷமாச்சு! நம்பவே முடியலை!! விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்! அப்படியென்ன ஸ்பெஷல் பார்த்தீங்களா!!

Summary:

6 வருஷமாச்சு! நம்பவே முடியலை!! விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்! அப்படியென்ன ஸ்பெஷல் பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் விக்னேஷ் சிவன். இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். 

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி, ராதிகா, பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.  இந்தப் படத்தில் நடித்தபோது நயன்தாராவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது.  நிஜ வாழ்க்கையிலும் இருவரும் இணையவிருப்பதை அறிவித்த இருவரும், ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, கோயில்களுக்குச் செல்வது, புகைப்படங்களை வெளியிடுவது என உள்ளனர்.

இந்த நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 6 ஆண்டுகள் ஆகிறது. இதனை மகிழ்ச்சியுடன் நினைவுக்கூறும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 6 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை நம்பவே முடியலை என பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement