என்னது.. மீண்டும் மூன்றாவது முறையாக திருமணம் செய்ய உள்ளாரா விக்னேஷ் சிவன்?? தீயாய் பரவும் தகவல்!!Vignesh shivan going to tie knot third time

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9-ம் தேதி இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணமான நான்கு மாதத்திலேயே தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாகவும் தெரிவித்தனர். அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. மேலும் பல சர்ச்சைகளும் கிளம்பின. 

அவற்றிற்கலாம் அவர்கள் தகுந்த ஆதாரங்களின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தனர். நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில், நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் அந்த வாய்ப்பும் கைநழுவியது.

இதற்கிடையில் அவர்களிடம் திருமணம் நடந்த நேரம் சரியில்லை என ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளாராம். மேலும் ஏற்கனவே விக்னேஷ் சிவன் வாழை மரத்திற்கு முதலில் தாலி கட்டிவிட்டு நயன்தாராவிற்கு இரண்டாவதாக தாலி கட்டினாராம். இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மீண்டும் மூன்றாவது முறையாக நயன்தாராவிற்கு தாலி கட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.