விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தில் இருந்து வெளியான வீடியோ! என்ன வீடியோ தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!



Video from Vikram's Sami Square! What video do you know? Fans shocked!

பிரபல முன்னணி திரைப்பட நடிகர்களில் நடிகர் விக்ரமும் ஒருவர் ஆவார். இவர் தானாகவே முன் வந்து தற்போது ஒரு விளம்பர குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான இந்த சாமி 2 என்னும் திரைப்படம் வருகின்ற 21-ந் தேதி அன்று தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி அவர்கள் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும்  ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சில முக்கிய வேடங்களில் நடிகர் சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி மற்றும் பிரபு, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிகர் பாபி சிம்ஹாவும் நடித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் இப்படத்தில் உள்ள புது மெட்ரோ ரயில் பாடல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.