"விடுதலை திரைப்பட மேக்கிங் குறித்து வெற்றிமாறன்!" எகிறிய பட்ஜெட்.. குழப்பத்தில் தயாரிப்பாளர்கள்.?

"விடுதலை திரைப்பட மேக்கிங் குறித்து வெற்றிமாறன்!" எகிறிய பட்ஜெட்.. குழப்பத்தில் தயாரிப்பாளர்கள்.?



Vetrimaran openup about Viduthalai movie budget

கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "விடுதலை". இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுக்களை பெற்ற இத்திரைப்படம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் படமாக்கப்பட்டது.

Viduthalai

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் சிறுமலையில் தொடங்கி திருவள்ளூரில் நடைபெற்றது. சமீபத்தில் தான் சூரி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு, தற்போது விஜய் சேதுபதியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெற்றிமாறன் இடைவெளியே இல்லாமல், மேலும் மேலும் கதாப்பாத்திரங்களை சேர்த்து படத்தை எடுத்து வருகிறாராம். அதனால் இன்னும் 30நாட்கள் வரை படப்பிடிப்பு செல்லும் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து வெற்றி மாறன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Viduthalai

அவர் கூறியது, "முதலில் 4கோடியில் முடிக்க வேண்டும் என்று தான் படத்தை ஆரம்பித்தோம். ஆனால் 10 சதவீத படத்தை முடிப்பதற்குள் 4கோடியைத் தாண்டிவிட்டது பட்ஜெட். மொத்தப் படத்தையும் முடிக்க 65கோடி வரை ஆகிவிட்டது. எனவே தான் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடுகிறோம்" என்று கூறியுள்ளார்.