சினிமா

நண்பருடன் மீண்டும் ஒரு படம் - அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டு அசத்திய வெற்றிமாறன்!

Summary:

Vetrimaran directs danush again

இயக்குனர் வெற்றிமாறன் 5 ஆவது முறையாக நடிகர் தனுஷை வைத்து  புதிய படத்தினை இயக்கப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாளை ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பல படங்கள் குறித்த புதிய அப்டேட்கள் வந்த வன்னம் உள்ளன. இது தனுஷ் ரசிகர்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தை அளித்து வருகிறது.

நாளை ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல், கர்ணன் படத்தின் டைட்டில் லுக் போன்றவை வெளியாகவுள்ளன. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது பங்கிற்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது அடுத்த படம் தனது நண்பர் தனுஷை வைத்து எடுக்க உள்ளதாகவும் 5 ஆவது முறையாக மீண்டும் அவருடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த படத்தின் டைட்டில் நாளை 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement