“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!
விசில் பறக்கப்படும் விசிக கட்சி! கோட்டையை அதிரவைத்த திருமாவளவன் ஒற்றை வார்த்தை.! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...!!!
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைகிறது. இதை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேரடியாக அறிவித்துள்ளார். கட்சி சார்பில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கி வந்த விசிக, தற்போது ஆட்சியில் நேரடியாக பங்கேற்க முடிவு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கூட்டணி அரசியலில் இது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
திருமாவளவன் அதிரடி அறிவிப்பு
செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், “விஜய் அமைச்சரவையில் விசிக பங்கேற்கிறது. எங்கள் கட்சி சார்பில் வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்” என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகியதும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் தீவிரமடைந்தன.
இதையும் படிங்க: #சற்றுமுன் : விஜய் - காங்கிரஸ் கூட்டணி..... தவெகவுக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு அறிவித்த காங்கிரஸ்...!!!
தகவலின்படி, கடந்த சில வாரங்களாக தவெக மற்றும் விசிக இடையே அமைச்சரவை பங்கேற்பு குறித்து பல கட்ட ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு
விசிக அமைச்சரவையில் இணைவது, தவெக அரசுக்கு கூடுதல் அரசியல் பலம் தரும் நகர்வாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சமூகநீதி மற்றும் கூட்டணி சமநிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மற்ற கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், விசிக ஆட்சியில் பங்கேற்பது தமிழக அரசியல் சமன்பாடுகளில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: யார் என்ன செய்தாலும்.... விஜய்யை வீழ்த்த முடியாது! ஆதரவு கடிதத்தோடு வந்த ஆதவ் அர்ஜுனா சொன்ன அந்த ஒரு வார்த்தை.! மகிழ்ச்சியில் மக்கள்...!!