சினிமா

வருத்தப்படாத வாலிபர்சங்கம் படத்தில் நடித்த பொண்ணா இது? இப்போ எப்படி மாறிட்டாங்க பாருங்க!

Summary:

VAruthapatatha valipar sangam shalu modern photos

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்கியிருந்தார். இயக்குனராக பொன்ராமுக்கும் இந்த படம் முக்கியமான திரைப்படம். படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருப்பார்.

ஹீரோயினுக்கு அப்பாவாக, படத்தில் கூடுதல் பலமாக நடிகர் சத்யராஜ் நடித்திருந்தார். படத்தின் வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக சூரி னைத்திருந்தார், சிறு வேடத்தில் பிந்து மாதவி என முக்கிய நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா காதல் ஒருபக்கம் நகைச்சுவையாக செல்ல, மறுபக்கம் சூரி மற்றும் நாயகியின் தோழி இருவரின் காதல் மறுபக்கம் நகைச்சுவையாக செல்லும்.

https://cdn.tamilspark.com/media/173469b2-varutha-padatha-valibar-sangam-et00016809-24-03-2017-18-16-18.jpg

இதில் நாயகி ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக, நகைச்சுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக ஒரு பெண் நடித்திருப்பார். அவரது பெயர் ஷாலு. படத்தில் சிறு சிறு காட்சிகளில் இவர் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் ஷாலு. தற்போது மிகவும் கலக்கலாக, மாடர்னாக உடையணிந்து மாடர்ன் மங்கையாக மாறியுள்ளார். இவரது மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement