சினிமா

வர்மா படத்தை இயக்கப்போவது கவ்தம் மேனன் இல்லையாம்! இவர்தானாம்!

Summary:

Varma remake movie new director details

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தெலுங்கு மட்டும் இல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றிபெற்றது இந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம்.

இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பிரபல இயக்குனர் பாலா இந்த படத்தை இயக்கினார். E4 என்றடைன்மெண்ட் என்ற இந்த நிறுவனம் படத்தை தயாரித்தது.

https://cdn.tamilspark.com/media/16841l9l-varma-dropped.png

இந்நிலையில் இயக்குனருக்கும், தயாரிப்பளாருக்கும் ஏற்பட்ட சண்டையால் வர்மா படத்தை கைவிடுவதாக தயாரிப்பு தரப்பு அறிக்கை வெளியிட்டது. அவர்கள் வெளியிட அறிக்கையில் படத்தின் பைனல் காப்பி எங்களுக்கு பிடிக்கவில்லை, நடிகர் துருவ் வை தவிர அனைவரையும் தூக்கிவிட்டு படத்தை முதலில் இருந்து எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தது.

அதன்படி, இந்த படத்தை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கப்போவதாக செய்திகள் வந்தன. ஆனால், தற்போது அர்ஜுன் ரெட்டி படத்தை தெலுங்கில் இயக்கிய அதே இயக்குனர் சந்தீப் ரெட்டி யை வைத்து எடுக்க தயாரிப்பாளர் நினைக்கிறார் என தகவல் பரவி வருகிறது.

ஆனால் அவர் தற்போது அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக் 'கபீர் சிங்' படத்தில் பிசியாக இருப்பதால், அவரின் உதவி இயக்குனர் Girisayya என்பவர் தமிழ் ரிமேக்கை இயக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.


Advertisement