வர்மா படத்தின் பெயரும் அதிரடி மாற்றம்! புது படக்குழு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு!

வர்மா படத்தின் பெயரும் அதிரடி மாற்றம்! புது படக்குழு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு!


varma-movie-name-renamed-as-adithya-varma

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தெலுங்கு மட்டும் இல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றிபெற்றது இந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம்.

இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பிரபல இயக்குனர் பாலா இந்த படத்தை இயக்கினார். E4 என்றடைன்மெண்ட் என்ற இந்த நிறுவனம் படத்தை தயாரித்தது.

varma

இந்நிலையில் இயக்குனருக்கும், தயாரிப்பளாருக்கும் ஏற்பட்ட சண்டையால் வர்மா படத்தை கைவிடுவதாக தயாரிப்பு தரப்பு அறிக்கை வெளியிட்டது. அவர்கள் வெளியிட அறிக்கையில் படத்தின் பைனல் காப்பி எங்களுக்கு பிடிக்கவில்லை, நடிகர் துருவ் வை தவிர அனைவரையும் தூக்கிவிட்டு படத்தை முதலில் இருந்து எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தது.

varma

அதனை தொடர்ந்து படத்தின் புது நாயகி குறித்து சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் படத்தின் பெயரையும் அதிரடியாக மாற்றியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

தற்போது இப்படத்திற்கு ‘ஆதித்ய வர்மா’ என்று தலைப்பு வைத்து படக்குழுவினர் பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளனர். இதில் நாயகிகளாக பனிதா சந்து, பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். கிரிசாயா இப்படத்தை இயக்குகிறார். ரவி கே சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இ4 நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.