சினிமா

நள்ளிரவில் எடுக்கப்பட்ட வரலட்சுமியின் புகைப்படங்கள்! ஏதேதோ ஞாபகம் வருது

Summary:

Varalakshmi black and white photoshoot

பிரபல தமிழ் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சமீபத்தில் வெளியான சண்டக்கோழி2 மற்றும் சர்க்கார் படங்களில் வில்லியாக நடித்து பெரும் புகழைப் பெற்றார். 

விஜய்யின் ‘சர்கார்' படத்திற்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கைவசம் விமலின் ‘கன்னி ராசி', பிரியதர்ஷினியின் ‘சக்தி', வினய்யின் ‘அம்மாயி', தனுஷின் ‘மாரி 2', ஜெய்யின் ‘நீயா 2', சரத்குமாரின் ‘பாம்பன்', மனோஜ்குமார் நடராஜனின் ‘வெல்வெட் நகரம்', வைபவ்வின் ‘காட்டேரி', JK-வின் ‘ராஜபார்வை' என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில் JK இயக்கும் படத்தில் வரலக்‌ஷ்மி பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தை ‘சாய் சமரத் மூவிஸ்’ தயாரிக்கிறது. இப்படத்திற்கு 1981ம் ஆண்டு கமலின் நடிப்பில் வெளியான ‘ராஜபார்வை’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு விக்ரம் வேதா பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்க, மேத்தீவ்ஸ் ஒளிப்பதிவு, வெங்கி படத்தொகுப்பு செய்ய உள்ளனர்.

பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் வரலட்சுமியின் போட்டோ சூட் சமீபத்தில் நடந்துள்ளது. முழுவதும் கருப்பும் வெள்ளையாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் பழைய காலத்து கதாநாயகிகளை கண்முன்னே கொண்டுவருகிறது. சில தருணங்களில்  கருப்பு வெள்ளையுமே வாழ்க்கைக்கு சந்தோசத்தை அளிக்கிறது என வரு கூறியுள்ளார். 


Advertisement