குடும்பத்துடன் இலங்கையில் செம ஜாலியாக சுற்றி வரும் நடிகை வரலட்சுமி... வைரலாகும் புகைப்படம்!! குவியும் லைக்ஸ்கள்...

குடும்பத்துடன் இலங்கையில் செம ஜாலியாக சுற்றி வரும் நடிகை வரலட்சுமி... வைரலாகும் புகைப்படம்!! குவியும் லைக்ஸ்கள்...


Vara Lakshmi srilanka trip photos viral

தமிழில் சிம்புடன் இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் ஆவார். இவர் சரத்குமார் என்பவரின் மகள் என்பதை தாண்டி தனது கடின உழைப்பால் உயர்ந்து இன்று முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 

வரலட்சுமி சிறந்த நடிகையாக மட்டுமின்றி வில்லியாக படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். 

இந்நிலையில் தற்போது தனது குடும்பத்துடன் இலங்கை டூர் சென்று செம ஜாலியாக சுற்றி திரிந்துள்ளார். அங்கு அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படத்தை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.