சினிமா

படுக்கை அறை காட்சியில் நடித்தது பற்றி படத்துடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல முன்னணி தமிழ் நடிகை.

Summary:

vanjagar-ulakam- actor santhini

குரு சோமசுந்தரம்,  தியாகராஜா குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ்  தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாண்டியநாடு,  ஜிகர்தண்டா, ஜோக்கர் போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  அதனால் ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் 'ஹீத் லெட்ஜர்'  என  அழைக்கப்படுகிறார்.

' வஞ்சகர்  உலகம்'  படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பதாகவும்,  புதுமுகம் சிபி கதாநாயகனாகவும் , அனிஷா அம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளார்கள். விக்ரம் வேதா, மிஸ்டர் சந்திரமௌலி புகழ் சாம் இசையமைத்துள்ளார். விநாயக் எழுதிய கதையை, அறிமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கியுள்ளார். இப்படத்தின் ப்ரோமோ இரண்டாவது ட்ரைலர் வெளியாகி உள்ளது.

 

Image result for actress santhini tamilarasan vanchakar ulakam

நடிகை சாந்தினி,  இந்தப் படத்தில் படுக்கை அறை காட்சியில்  தோன்றி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தக் காட்சி அனுபவம் பற்றி நடிகை சாந்தினி கூறியபோது, 'வஞ்சகர் உலகம்' படத்தின் கதையை இயக்குனர் மனோஜ் என்னிடம் கூறினார். அப்பொழுது  படத்தில் ஒரு கவர்ச்சியான படுக்கை அறை காட்சி இருக்கிறது நீங்கள் நடித்தால்தான் படம் சிறப்பாக அமையும்  என்று நீண்ட நேரம் என்னிடம் விளக்கினார்.

அப்போதுதான் படத்தின் கதைக்கு இந்த கட்சியின் முக்கியத்துவத்தையும்,   படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மீது படம் பார்ப்பவர்களுக்கு அனுதாப அலை வீசும்  என்பதையும் உணர்ந்தேன்.  அதனால்தான் அந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எதிர்பார்த்தது போலவே ‘வஞ்சகர் உலகம்’ படத்தில், என் கதாபாத்திரம் மக்களிடம் பேசப்பட்டது என்று கூறினார்.


 


Advertisement