சினிமா

தரக்குறைவாக விமர்சிப்பவர்களுக்கு, அதிரடியாக நடிகை வனிதா விடுத்த எச்சரிக்கை! நெட்டிசன்களை மிரளவைக்கும் ஷாக் பதிவு!

Summary:

Vanitha warning netisans who talk badly

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபலமானவர் வனிதா. அதனை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்னர் தனியாக யூடியூப் சானல் ஒன்றை தொடங்கி, மக்கள் மத்தியில் மேலும்  பிரபலமான நடிகை வனிதா கடந்த மாதம் 27ம் தேதி இயக்குனர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். 

இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானநிலையில் பெரும் சர்ச்சைகள் கிளம்பியது.  மேலும் பீட்டர்பாலின் முதல் மனைவி, அவரை குறித்து தவறாக கூறி,  தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல், அவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என போலீஸில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்தும் பீட்டர்பாலுக்கு ஆதரவாக அவ்வப்போது வனிதா தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில்  நெட்டிசன்கள்  பலரும் வனிதா குறித்து இணையத்தில் மோசமாக விமர்சனம் செய்து வந்தனர். மேலும் சமீபகாலமாக சூர்யாதேவி என்ற பெண் வனிதாவை யூடியூபில் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி பேசி வருகிறார். இவ்வாறு தன்னை குறித்து மோசமாகவும்,  ஆபாசமாகவும் விமர்சிப்பவர்களுக்கு வனிதா அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் தோனியில் வனிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடந்தது என்ன என்பதை முழுவதும் அறியாமல், என்னை மோசமாக விமர்சனம் செய்து மகிழ்ச்சி அடைவர்களுக்கு, நீங்கள் சாதாரணமாக என்னை பற்றி  பதிவிடும் மனதை புண்படுத்தும் மோசமான மற்றும் ஆபாசமான கருத்துக்கள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை. சைபர் புல்லிங் என்பது காமெடியான விஷயமல்ல. இதனால் ஒருவரது உயிரே போகலாம். நீங்கள் பதிவிடும் மோசமான கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொண்டு நான் ஏதேனும் செய்து கொண்டால், நீங்கள்தான் கொலைகாரர்கள் தெரியுமா? 

அதனால் எதையும் செய்வதற்கு முன்பு நன்றாக சிந்தியுங்கள். நான் ஏதேனும் தவறாக செய்திருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது. கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு மட்டுமே நான் பதிலளிப்பேன். உங்களுக்கு நடந்த எந்த உண்மையும் தெரியாது என பதிவிட்டுள்ளார்.


Advertisement