சினிமா

3 வது திருமணம் முடிந்ததும் சோகத்தில் மூழ்கிய வனிதா..! ஆறுதலாக 3 வது கணவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சி வீடியோ பதிவு.!

Summary:

Vanitha VijayKumar 3rd husband peeter paul new video

இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் வனிதாவுக்கு நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் சரி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் சரி இவரை பற்றிய பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் இருந்தன. 

இந்நிலையில்தான் பீட்டர் பால் என்பவரை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு ரசிகர்களும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி வந்தனர். 

வயதுக்கு வந்த மகளை அருகில் ...

அதுபோக பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில் அவரது முதல் மனைவி எலிசபெத் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கூட பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டது இவர்களது திருமண வாழ்க்கையில் மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தன் மீது வீசப்படும் ஒவ்வொரு சர்ச்சைகளுக்கும் பதில் அளித்து வீடியோவை வெளியிட்டு வந்தார் வனிதா விஜயகுமார். இந்நிலையில் இவரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் அவர்களுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோ பதிவில் "நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் வனிதாதான் எனவும், இரண்டு நாட்களாக அவர் என்னை ஒரு தாயை போல் அருகில் இருந்து பார்த்துக் கொண்டார் எனவும், இப்போதுதான் நான் எனது வாழ்வில் எவ்வளவு இழந்திருக்கிறேன் என்பது எனக்கே தெரிய வந்துள்ளது எனவும் உருக்கமாக அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்".


Advertisement