நல்ல செய்தி கூறிய வனிதா.. நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டில் மீண்டும் விசேஷம்.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..

நல்ல செய்தி கூறிய வனிதா.. நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டில் மீண்டும் விசேஷம்.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..


Vanitha vijayakumar shared happy news with fans

தனது இளைய மகள் பூப்பெய்திருப்பதாக நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சந்திரலேகா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி பின்னர் நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து  தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன்பிறகு பிரபல நடிகரும், தனது தந்தையுமான நடிகர் விஜயகுமாருடன் குடும்ப பிரச்னையில் சிக்கி சர்ச்சைகளை கிளப்பினார்.

இதனால் சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டுவந்த இவர், கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் ஒருபுறம் உருவானாலும், இவர் குறித்த சர்ச்சைகள் சமூகவலைத்தளங்களில் நின்றபாடில்லை.

vanitha

இந்நிலையில்தான் பீட்டர் பால் என்பவரை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். அதற்காக பலரும் வனிதாவை மோசமாக திட்டி கமெண்ட் பதிவிட்டுவந்தனர். அதற்கு ஏற்றாற்போல், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை, திருமணம் முடிந்த சில நாட்களிலையே வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்துவிட்டனர்.

இப்படி தொடர்ந்து சிக்கலில் சிக்கி தவித்துவரும் வனிதா தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். தனது இளைய மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளார் எனவும், மகள்கள் இந்த உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வனிதா. வனிதா கூறிய இந்த மகிழ்ச்சியான செய்தியை அடுத்து, அவரது ரசிகர்கள் அவரது மகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.