சும்மா கெத்து காட்டுறாரே! வனிதா வீட்டில் விசேஷம்! அட.. யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீங்களா!!

சும்மா கெத்து காட்டுறாரே! வனிதா வீட்டில் விசேஷம்! அட.. யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீங்களா!!


vanitha-start-new-studio-photos-viral

தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா. பின்னர் அவர் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது செயலால், பேச்சால் விமர்சனத்திற்கு ஆளானார்.

பின்னர் பீட்டர் பாலுடன் மூன்றாவது திருமணம், மூன்று மாதத்திலேயே விவாகரத்து என இணையத்தில் பேச்சுப்பொருளானார். மேலும் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது சமையல் செய்வது உள்ளிட்ட பல வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான பாலோவர்ஸ்களை பெற்றார். 

இந்நிலையில் வனிதா கடந்த ஆண்டு பொட்டிக் ஷாப் ஒன்றை தொடங்கி புதிய பிசினஸை ஆரம்பித்தார். மேலும் அங்கு சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பெண்களுக்காக போட்டோஷூட் நடத்திக் கொள்ள பிரத்யேகமான ஆடைகளும் விற்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி வனிதா ஃபேஷன் டிசைனராகவும், மேக்கப் ஆர்டிஸ்டாகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது புதிதாக வனிதா விஜயகுமார் ஸ்டூடியோஸ் ஒன்றை தொடங்கியுள்ளார்.

அங்கு சினிமா மற்றும் சீரியலில் நடிப்பதற்காக போட்டோஷூட், மணப்பெண் அலங்காரம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் எனவும் வனிதா கூறியுள்ளார். அந்த விழாவிற்கு தாடி பாலாஜி, காயத்ரி ரகுராம், நடிகை ரேகா, சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.