நாங்களே வாயை மூடிட்டு இருக்கோம்.. உங்களுக்கு என்ன.? நகுலுக்கு வனிதா கொடுத்த பதிலடி.!

நாங்களே வாயை மூடிட்டு இருக்கோம்.. உங்களுக்கு என்ன.? நகுலுக்கு வனிதா கொடுத்த பதிலடி.!


vanitha-replay-for-nakkhul

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது செயல்களால் விமர்சனத்திற்கு உள்ளானார். அதனைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் வெற்றியாளரானார்.

பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வனிதா, மூன்றாவது திருமணம், விவாகரத்து என பல சர்ச்சைகளை சந்தித்தார். சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் நடந்துக்கொள்ளும் வனிதா அதன் மூலம் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம்.

விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனையால் வனிதா சமீபத்தில் வெளியேறினார். அதற்காக நடுவர்களை குற்றம் சாட்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நடுவர்களில் ஒருவரான நகுல் அளித்திருக்கும் பேட்டியில் வனிதாவை தகாத வார்த்தைகளை பேசியதாக குற்றம்சாட்டி உள்ளார். சமீபத்தில் நகுல் அளித்திருக்கும் பேட்டியில், வனிதா அம்மன் கெட்டப் போட்டுகொண்டு செட்டில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தன்னை பற்றி தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணனும் ஆதரவாக பேசிய நிலையில், தற்போது வனிதா பதிலடி கொடுத்துள்ளார். வனிதா அவரது ட்விட்டர் பக்கத்தில், நான் என் வாழ்க்கையை பிஸியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த வேலையில்லாத இடியட்களின் உளறல்களை கண்டுகொள்ள எனக்கு நேரம் இல்லை. செட்டில் என்ன நடந்தது, அதன் பின் ஜட்ஜுகளை வைத்து மீண்டும் ஷூட் செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட மார்க்கை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் ஷோவில் தொடர வேண்டாம் என நான் முடிவு செய்தேன்.

எனக்கு ஒருவருடன் பிரச்சனை வருகிறது என்றால், எங்களுக்கு நடுவில் ஏற்கனவே பிரச்சனை இருந்தது என்று அர்த்தம். அது எங்களுக்கு நடுவில் தான். நாங்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது, மற்றவர்களும் அதை பற்றி பேசாமல், விமர்சிக்காமல் இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.