தொடரும் நடிகை வனிதாவின் வில்லித்தனம்.! துடிதுடித்து கதறி அழுத போட்டியாளர்!!

தொடரும் நடிகை வனிதாவின் வில்லித்தனம்.! துடிதுடித்து கதறி அழுத போட்டியாளர்!!


vanitha-fight-with-meera-mithun

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. இந்த போட்டியில் பாத்திமா பாபு, லாஸ்லியா,நடிகை சாக்ஷி அகர்வால், ஜாங்கிரி மதுமிதா, சரவணன் மீனாட்சி கவின், அபிராமி ஐயர், பருத்தி வீரன் சித்தப்பு சரவணன், நடிகை வனிதா விஜயகுமார், இயக்குனர் சேரன், நடிகை ஷெரின், பாடகர் மோகன் வைத்யா, சாண்டி மாஸ்டர்,மாடல் தர்சன், மலேசிய பாடகர்  முகின் ராவ், ரேஷ்மா ஆகியோர் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர்.

meeeramithun

இதனை இருந்து  இரண்டாவது நாள் நடிகை மீரா மிதுனும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

இந்நிலையில் மீராமிதுன் வீட்டிற்குள் வந்தநாள் முதல் அபிராமி, வனிதா, ஷெரின், மற்றும் சாக்ஷி ஆகியோர் விமர்சனம் செய்து புறம் பேசி வருகின்றனர். மேலும் வனிதா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மீராவிடம் கடுமையாக பேசி சண்டை போட்டுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் மீண்டும் வனிதா மீரா மிதுனுடன் சண்டை போட்டுள்ளனர். இதில் மனமுடைந்து மீரா கடுமையாக அழுதுள்ளார். மேலும் சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இந்த .வீடியோ பிரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.