என்னது.. பிக்பாஸ் வனிதா இப்படிபட்டவரா.? தனது அம்மா குறித்த சீக்ரெட்டை போட்டுடைத்த ஜோவிகா! ஷாக்கில் ரசிகர்கள்!!

என்னது.. பிக்பாஸ் வனிதா இப்படிபட்டவரா.? தனது அம்மா குறித்த சீக்ரெட்டை போட்டுடைத்த ஜோவிகா! ஷாக்கில் ரசிகர்கள்!!


vanitha-daughter-open-about-her-mother

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். அதன் 5வது சீசன் அண்மையில் முடிவடைந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே வாக்குவாதங்கள், மோதல்களுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் கடந்த பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட ஜூலி, சினேகன், சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா, அபிராமி, அனிதா சம்பத், பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி , தாமரை, ஸ்ருதி, அபிநய் மற்றும் நிரூப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

vanitha

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் சகப் போட்டியாளர்களுடன் மல்லுக்கட்டி சண்டை போட்டு வரும் வனிதா குறித்து அவரது மகள் ஜோவிகா மனம் திறந்துள்ளார். அதாவது அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், எங்களது அம்மா ஒரு திறந்த புத்தகம். அவர்களுக்கு எந்த சீக்ரெட்டையும் வச்சுக்கவே தெரியாது. மேலும் கண்டிப்பாக அதிலிருந்து ஒரு அழகான ஸ்டோரியை சொல்வதற்கும் வாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளார்.