சினிமா

ஆத்தாடி.. புடவையை தூக்கி சொருகி, செம்ம கெத்தாக, ஸ்டைலாக புல்லட் ஓட்டிய வனிதா! வைரலாகும் வேற லெவல் வீடியோ!!

Summary:

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. சர்ச்சைகளுக்கு பெயர் போன அவர்  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது செயல்களால் விமர்சனத்திற்கு உள்ளானார். அதனைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் வெற்றியாளரானார்.

பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் மூன்றாவது திருமணம், விவாகரத்து என பல சர்ச்சைகளை சந்தித்தார். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக உள்ளார். மேலும் அவர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் பிக்கப் டிராப் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். திருமண கோலத்தில் இருப்பது போன்ற இப்படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் வனிதா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது புடவையில் ஃபுல் மேக்கப்பில் பைக் ஓட்டுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.


Advertisement