சினிமா

இந்த ஒரு சீன் போதும், தியேட்டரே சும்மா அதிரும்ல!! வலிமை மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்! வேற லெவல்தான்..

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

மேலும் அவர்கள் தொடர்ந்து பலரையும் நச்சரித்து வந்த நிலையில் வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விளம்பரங்கள் மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.  இந்நிலையில் வலிமை படத்தின் சண்டை பயிற்சியாளரான திலிப் சுப்புராயன் முக்கியமான மாஸ் சேசிங் சண்டைக்காட்சி குறித்த அசத்தல் அப்டேட்டை சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார்

அதில் அவர், இதுவரை தல அஜித் பல படங்களில் பைக் சேசிங், கார் சேஸிங் செய்திருப்பார். ஆனால் இப்படத்தில் முதல் முறையாக அஜித் பஸ் சேசிங் செய்துள்ளார். இந்த காட்சியில் அடிகள் இடியாக இருக்கும். சண்டை டபுள் மாஸாக இருக்கும் என கூறியுள்ளாராம். இது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 


Advertisement