சினிமா

பெரும் எதிர்பார்ப்பில் காத்துகிடந்த அஜித் ரசிகர்களை குஷியாக்கிய ஒத்த புகைப்படம்! செம மாஸ்ல..

Summary:

அஜித் வலிமை பட சூட்டிங்கில் பைக் வீலிங் செய்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். அஜித்தின் 60 வது படமாக தயாராகிவரும் இந்த படத்திற்கு படக்குழு வலிமை என பெயரிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித் ஆக்சன் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பரவிவந்த கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் தடைபட்டது. மேலும் இப்படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளிவரவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த நிலையில் அஜித் பட சூட்டிங்கில் பைக் வீலிங் செய்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் அதனை பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement