கொரோனாவால் அஜித்தின் வலிமை படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

Valimai director planing to change shooting spot


valimai-director-planing-to-change-shooting-spot

கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கியுள்ளனர். அணைத்து துறை சார்ந்த வேலைகளும் கைவிடப்பட்டுள்ள நிலையில், சினிமா துறையும் முற்றிலும் முடங்கியுள்ளது. படம் வெளியீடு, படப்பிடிப்பு இப்படி அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தல அஜித் நடிப்பில், இயக்குனர் வினோத் இயக்கிவரும் வலிமை படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, டெல்லி, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்றுவந்த நிலையில், படத்தில் முக்கியமான பெரிய ஆக்‌ஷன் காட்சி ஒன்றை படத்தின் இயக்குனர் ஜோர்டான் நாட்டில் படமாக்க முடிவு செய்திருந்தாராம்.

Valimai

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஜோர்டான் நாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் படப்பிடிப்பு நடத்த காலவரையறை இன்றி தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட காட்சியை திட்டமிட்டபடி ஜோர்டான் நாட்டில் நடத்த இனி வாய்ப்பில்லை என தெரிகிறது.

இதனால் கொரோனா பாதிக்கப்பட்டதா வேறொரு நாட்டில் படப்பிடிப்பை நடத்த படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை போனிகபூர் தயாரித்துவருகிறார். படத்தின் நாயகியாக ஹுமா குரேஷி, நகைச்சு நடிகர் யோகி பாபு மற்றும் வில்லனாக தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா ஆகியோர் நடித்துவருகின்றனர்.