சினிமா

செம மாஸ்.. வெளியானது வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ...உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Summary:

செம மாஸ்.. வெளியானது வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ...உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இது அஜித்தின் 60வது திரைப்படமாகும். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.  மேலும் வலிமை திரைப்படத்தில் கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இதற்கு முன்னதாக வலிமை படத்திலிருந்து நாங்க வேற மாறி பாடல் யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதனையடுத்து வலிமை குறித்த அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

 இந்நிலையில் வலிமை படத்தின் 2வது பாடல் புரமோ இன்று சமூகவலைதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.மேலும் இதன் முழு பாடல் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. தாய் மகன் பாசத்தை உணர்த்தும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத, சித் ஸ்ரீராம் பாடி இருக்கிறார்.


Advertisement