'சாயாவனம் சாய்ந்துவிட்டதே' எழுத்தாளர் கந்தசாமி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்.! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

'சாயாவனம் சாய்ந்துவிட்டதே' எழுத்தாளர் கந்தசாமி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்.!

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் எழுத்தாளர் சா.கந்தசாமி. சாயாவனம் என்னும் புதினம் மூலம் எழுத்துலகில் மிகவும் பிரபலமானார். 1998ஆம் ஆண்டு விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக, சாகித்ய அகாடமி விருது பெற்றார். தென்னிந்திய சுடுமண் கலங்கள் (டெரகோட்டா) ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

இதய நோய் சம்பந்தமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் இயற்கை எய்தினார்.

சா.கந்தசாமி மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மறைந்தாரே சா.கந்தசாமி! ‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே! தன்மானம் - தன்முனைப்பு தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ! சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது” என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo