லண்டன் சென்றுள்ள வைகைப்புயல் வடிவேலு! அதுவும் ஏன்னு பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

லண்டன் சென்றுள்ள வைகைப்புயல் வடிவேலு! அதுவும் ஏன்னு பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!


Vadivelu went to london for naaisekar returns shooting

தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. பின்னர் ஹீரோவாகவும்  அவர் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதலால் அவருக்கு  புதிய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பல வருடங்களாக அவரால் நடிக்க முடியவில்லை.

அதனை தொடர்ந்து சமீபத்தில் சமரச பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு தடை நீங்கியது. இந்நிலையில் நடிகர் வடிவேலுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் முன்னணி ஹீரோவாக நடித்து வருகிறார்.

Vadivelu

மேலும் இப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் ரெடின், நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிலையில் பாடல் படப்பிடிப்புக்காக வடிவேலு உட்பட நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழு லண்டன் சென்றுள்ளனர்.