சினிமா

வட சென்னை படம் மரண மாஸ்! ஆனால்? படம் பார்த்தவர்கள் கருத்து!

Summary:

Vada chennai first day fans review

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிய வட சென்னை திரைப்படம் இன்று அதிகாலை 5 மணி முதல் காட்சிகள் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே ஆடுகளம், பொல்லாதவன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் ஒரு வெற்றி படைப்பை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 'வடசென்னை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தில் அதிக இடங்களில் சண்டை, வன்முறை, கெட்ட வார்த்தைகள் இருப்பதால் குடும்பத்துடன் சேர்ந்து இந்த படம் பார்ப்பதை தவிர்க்குமாறு படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

படம் பெரும்பாலும் கேங்ஸ்டர் கதை அம்சம் கொண்டிருப்பதால் அதுபோன்ற படங்களை பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று வட சென்னை படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமீர் கேரக்டரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறும் ஒருசிலர் அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையின் முக்கியமான படம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக அருமை என்றும் விமர்சனங்கள் வெளிவந்துள்ளது. மொத்தத்தில் ஒருமுறை பார்க்கும் வகையிலான ஒரு கேங்ஸ்டர் படம் என்பதே ஆடியன்ஸ் கருத்தாக உள்ளது. இந்த படத்தை நீங்க எப்போ பார்க்க போறீங்க? கமெண்ட் பண்ணுங்க!


Advertisement