செம மாஸ்... சும்மா தெறிக்க விடும் வாத்தி டிரைலர்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

செம மாஸ்... சும்மா தெறிக்க விடும் வாத்தி டிரைலர்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!


Vaathi movie trailer released today

தனுஷ் நடிப்பில் தற்போது  உருவாகியுள்ள திரைப்படம் தான் வாத்தி. இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும்  தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழில் வாத்தி என்ற பெயரிலும்  தெலுங்கில் சார் என்ற பெயரிலும் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

இப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, பரணி, தொட்டபள்ளி மது, சாய் குமார் , இளவரசு மற்றும் ஆடுகளம் நரேன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மென்ட்  மற்றும் பார்ச்சூன் 4  ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் வருகின்ற 17 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வாத்தி படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சும்மா தெறிக்கவிடும் வகையில் இப்படத்தின் டிரைலர் காட்சிகள் அமைந்துள்ளன. இதனையடுத்து இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.