தனுஷை விடாமல் துரத்தும் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சர்ச்சை.!

தனுஷை விடாமல் துரத்தும் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சர்ச்சை.!



vaathi-movie-controversy-about-dhanush-speech

வாத்தி திரைப்படம் தனுஷ் மற்றும் சம்யுக்தா நடித்த தமிழ் திரைப்படம் ஆகும். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இப்படத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி, ஆடுகளம் நரேன் ஆகிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

Vaathi

வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தை பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ், சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவின் போது தனுஷ் மேடையில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இயக்குனர் பாரதி ராஜா இப்படத்தின் நடிகையை காதலிப்பதாக மேடையில் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மேலும் தனுஷ் மேடையில் பேசும் போது அவர் ட்யூசன் படிக்கும் நேரத்தில் ஒரு பொண்ணை காதலித்ததாகவும் அது ட்யூசன் மாஸ்டருக்கு தெரிந்து நடுத்தெருவில் கூத்தாட போற என்று அவர் கூறியதாக தனுஷ் காமெடியாக கூறியது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

Vaathi
அதன் பின் அவர் பள்ளிக்கூடம் படிக்கும் போது ஸ்கூல் பீஸ் அப்பா கட்டிவிடுவார் என்று இருந்தேன். இப்போது என் பசங்களுக்கு பீஸ் கட்டும் போது தான் வலிக்கிறது என்று கூறியிருக்கிறார். தனுஷ் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்  பல கோடி சொத்து இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேரன்களுக்கு லட்சத்தில் பீஸ் கட்ட கஷ்டமாக இருக்கிறதா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.