சினிமா

சமந்தாவின் யு.டர்ன் படம் வசூல் சாதனை...! ரசிகர்கள் கொண்டாட்டம்...!

Summary:

uturn-cross-23-crore

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்ட சமந்தா நடித்து சமீபத்தில் (இம்மாதம் 13 ஆம் தேதி) வெளியான படம் யு.டர்ன். இந்த படம் ஒரே நாளில் இரண்டு மொழிகளில் திரைக்கு  (தமிழ் மற்றும் தெலுங்கில்) வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும்  இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரிலீஸ் ஆனா அன்று நடிகர் சிவகார்த்திகேயனுடன் சமந்தா நடித்த சீமராஜா படமும் திரைக்கு வந்தது. இருந்தும் யு.டர்ன் படத்திற்கு ரசிகர்கள் ம், விமர்சகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படம் ஏற்கனவே கன்னட மொழியில் எடுத்த மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனால் மேலும் பல மொழிகளில் எடுக்கலாம் என்று முடிவு செய்து தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டும் எடுத்து திரையிட்டனர். 

இந்நிலையில் இந்த படம் மொத்தம்  23 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது என்று நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தி பார்த்ததும் சமந்தா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். மேலும் சமந்தாவின் அடுத்த வித்தியாசமான படத்திற்காக கத்திக்கொண்டு இருப்பதாக சமந்தா ரசிகர்கள் அவரவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள். 


Advertisement