தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தின் புதிய அப்டேட்! குழப்பத்தில் ரசிகர்கள்!

தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தின் புதிய அப்டேட்! குழப்பத்தில் ரசிகர்கள்!


update-about-enai-nokki-paayum-thotta

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் முதல் படம், 'எனை நோக்கி பாயும் தோட்டா'. படம் குறித்த அறிவிப்பு வந்த நாளிலிருந்து படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸான வரை இந்தப் படத்தின்மீது அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான 'விசிறி' பாட்டு பலரது மனதையும் கவர்ந்த நிலையில், படம் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் இருந்துவருகிறது.  

Ennai nokki paayum thotta

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அப்போதும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மதன், படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள மதன், ``எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெய்லர் ரெடியாகிவிட்டது. ரிலீஸுக்குத் தயாராகிவருகிறோம். எல்லாம் சரியாக இருந்தால் படம் ஏப்ரலில் ரிலீஸாகும்’’ என்று தெரிவித்துள்ளார். 

இவரது இந்த கருத்து படம் ஏப்ரலில் வெளியாகலாம் ஆகாமலும் போகலாம் என்பது போன்று தான் உள்ளது. எனவே படம் ஏப்ரலிலும் வெளியாவதை படக்குழு உறுதி செய்யாததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.