சினிமா

ஜே ஜே படத்தில் மாதவனுக்கு பதில் நடிக்க இருந்த இன்றைய மாஸ் நடிகர்! யார் தெரியுமா?

Summary:

Unknown facts of jj movie and its casting

சரண் அவா்களின இயக்கத்தில் மாதவன் நடித்து 2003-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெ.ஜெ. முக்கோண காதல் கதையை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது இப்படம்.இப்படத்தில் மாதவன் ஜோடியாக அமோகா நடிக்க இவா்களுடன், பூஜா, டெல்லிகணேஷ், தலைவாசல்விஜய், கலாபவன்மணி, மாளவிகாஅவிநாஷ், மனோபாலா. சாா்லி தாமு, சிலோன்மனோகா், தென்னவன் உட்பட பலா் நடித்திருந்தனா்.

பரத்வாஜ் அவா்கள் இசை அமைத்த இப்படத்தை ஆஸ்கா் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் இப்படம் முதலில் யாருக்காக எழுத்பட்ட கதை என்ற என்று தெரியுமா?


இயக்குநா் சரண் அவா்கள் முதலில் தளபதி விஜய் அவா்களை மனதில் வைத்து கொண்டே இக்கதையை எழுதினாராம். அதுவும் விஜய் அவா்களை ஜெய்சங்கா்-ஜேசுதாஸ் என இரண்டு வேடங்களில் நடிக்க வைக்க எண்ணி இருந்தாரம் சரண்.

மேலும் விஜய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் அவா்களை நடிக்க அணுகினாராம். ஆனால் அவா் நடிக்க மறுத்துவிடவே இத்திட்டத்தை கைவிட்டு விட்டாராம். பின்னா் இந்த கதையில் ஒரு சில மாற்றங்களை செய்து படத்தின் தலைப்பை ஜே.ஜே என வைத்து மாதவனை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தாராம்.

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநா் சரண் அவா்கள் நடிகை மந்தராபேடியை ஒப்பந்தம் செய்தாராம். ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படத்திலிருந்து வெளியேறி விட்டாராம்.


அதன் பிறகு இயக்குநா் சரண் அவா்கள் அணுகியது நடிகை சிம்ரன் அவா்களை, ஆனால் கால்ஷீட் பிரச்சனைகளால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியவில்லையாம். இறுதியில் அமோகா மற்றும் பூஜா ஆகியோரை இப்படத்தின் ஹீரோயின்களாக ஒப்பந்தம் செய்தாராம் இயக்குநா் சரண்.


Advertisement