செல்பி எடுக்க வந்த ரசிகைக்கு உதட்டில் இச்.. பதறிப்போன பெண்.. லீக்கான வீடியோ.! சர்ச்சையில் பாடகர்.!



Udit Narayan Kiss Controversy Tamil 


இந்திய திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக இருந்து வருபவர் உதித் நாராயணன். ஹிந்தி திரையுலகில் ஏராளமான பாடல்களை பதிவு செய்துள்ளவர் தெலுங்கு, கன்னடா, தமிழ், பெண்களை, சிந்தி, ஓடியா, நேபாளி, போஜ்புரி, மலையாளம், ஆசாமி உட்பட பல மொழிகளிலும் பாடல் பாடி இருக்கிறார். 

இவரின் திரையுலக கலைப்பயணத்தை பாராட்டி 4 தேசிய விருதுகள், 5 பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் விருதுகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நாராயணன், இன்று உலகளவில் கவனிக்கப்படுகிறார். 

இதையும் படிங்க: "வாய்ப்பு வேணுமா? நான் சொல்வதை கேளு" - நடிகை கூறிய தகவல்.. ஷாக்கில் திரையுலகம்.!

இதனிடையே, கனடாவில் சில மாதங்களுக்கு முன்பு நாராயணன் கலந்துகொண்ட இசை கச்சேரியில், அவருடன் செல்பி எடுக்க வந்த பெண்ணை நாராயணன் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்தார். 

இந்த வீடியோ இன்று காலை வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ள நாராயணன், எனது பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் யாரேனும் பரப்பி இருக்கலாம் என கூறுகிறார். 

மேலும், எனக்கும் - ரசிகர்களுக்கும் இடையேயான அன்பு ஆழமானது. அதனை அவமதிக்க வேண்டாம். அன்பின் அடையாளமாகவே முத்தம் கொடுக்கப்பட்டது. நான் வேறு ஏதும் தவறாக செய்யவில்லை என நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: மிஷ்கினின் சர்ச்சை பேச்சு.. நடிகர் அருள்தாஸ் கண்டனம்.!