நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்ளோ பெரிய மகளா! அடேங்கப்பா.. எங்கு சென்றுள்ளனர் பார்த்தீங்களா! வேற லெவல்தான்!!

நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்ளோ பெரிய மகளா! அடேங்கப்பா.. எங்கு சென்றுள்ளனர் பார்த்தீங்களா! வேற லெவல்தான்!!


udhayanithi-stalin-with-daughter-photo-viral

தமிழ் திரையுலகில் முதலில் தயாரிப்பாளராக களமிறங்கி பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். தமிழில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான அவர் அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  நடிகர் உதயநிதி ஸ்டாலின் இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், நிமிர், சைக்கோ என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் அவர் தற்போது அரசியலும் களமிறங்கி திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அசத்தி வருகிறார்.  நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர்.

 உதயநிதி ஸ்டாலினின் மகனது புகைப்படம் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது உதயநிதி ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக தனது மகளுடன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு மைதானத்தில் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.